லைஃப்ஸ்டைல்

சளியை குணமாக்கும் வெற்றிலை ரசம்

Published On 2017-05-29 03:34 GMT   |   Update On 2017-05-29 03:34 GMT
சளி, தொண்டை வலி, இருமல் பிரச்சனைக்கு வெற்றிலை விரைவில் நிவாரணம் தரும். இன்று வெற்றிலை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெற்றிலை - 6,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
பழுத்த தக்காளி - 2,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் (வேகவைத்து நீர் விட்டு கரைக்கவும்),
எண்ணெய் - சிறிதளவு,
உப்பு  - தேவையான அளவு.



செய்முறை :

* தக்காளி, வெற்றிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.

* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

* நெய்யில் தனியாத்தூள், மிளகு - சீரகப் பொடியை வறுத்து, கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும்.

* உடனடியாக நறுக்கிய வெற்றிலையை போட்டு மூடிவிடவும். 15 நிமிடத்துக்குப் பிறகு பரிமாறவும்.

* சூப்பரான வெற்றிலை ரசம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News