லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் கேழ்வரகு பணியாரம்

Published On 2017-05-19 03:39 GMT   |   Update On 2017-05-19 03:39 GMT
கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 கப்
உளுந்து மாவு - கால் கப்
கடுகு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்
ப.மிளகாய் - 2
தேங்காய் - தேவைக்கு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவையும், உளுந்து மாவையும் ஒன்றாகச் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துகொள்ளுங்கள்.

* அடுப்பில் வாணலியை வைத்து தீயை மிதமாக்கி, எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து தாளிக்கவும்.

* பிறகு தேங்காய்த் துண்டுகளை சேர்த்து புரட்டி தாளித்தவற்றை மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் லேசாக எண்ணெய் விட்டு சூடானதும் மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்தால் அருமையான கேழ்வரகு பணியாரம் ரெடி.

* இதற்கு தக்காளிச் சட்னி சிறந்த சைடிஷ்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News