லைஃப்ஸ்டைல்

ஹீமோகுளோபின் குறைய காரணம் என்ன?

Published On 2019-01-03 07:38 GMT   |   Update On 2019-01-03 07:38 GMT
நமது நாட்டில் பொதுவாக பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
ஹீமோகுளோபின் என்பது நமது ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஒரு வகை புரதம் ஆகும். இதில் இருப்பு சத்து அதிகம் இருக்கும். நமது நாட்டில் பொதுவாக பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

நெஞ்செரிச்சல், தலைவலி, உடல் சோர்வு, மயக்கம், நகம் உடைத்தல், உடலில் வலு இல்லாதது போல உணர்வது இப்படி பல அறிகுறிகள் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும்.



இதில் அனைத்து அறிகுறிகளும் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில அறிகுறிகள் சிலருக்கு இருக்கும்.

ஹீமோகுளோபின் குறைய காரணம்:

சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும்.

பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News