லைஃப்ஸ்டைல்

வீக்கம் தவிர்க்கும் உணவுகள்

Published On 2017-12-13 02:55 GMT   |   Update On 2017-12-13 02:55 GMT
உடலில் ஏற்படும் வீக்கத்தினை குறைப்பதற்கு அதற்கான உணவு முறையினை பின் பற்றினாலே போதும். நல்ல பலன்களை பெற்று விடலாம்.
உடலில் எங்கேனும் சிறிது வீக்கம் இருக்கின்றது என்றால் அதன் பொருள் அவ்விடத்திலுள்ள நோய் தாக்குதலை எதிர்த்து உடலை பாதுகாக்கும் முறையின் வெளிப்பாடு என்று பொருள் படும்.

ஆனால் சில மருத்துவ காரணங்களாலும் தவறான வீக்கங்கள் ஏற்படுவதுண்டு. இந்த வீக்கத்தினை குறைப்பதற்கு அதற்கான உணவு முறையினை பின் பற்றினாலே போதும். நல்ல பலன்களை பெற்று விடலாம். இந்த உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். பொதுவில் மீன், முழு தானியம், நல்ல கொழுப்பு இவை இருதயத்திற்கான நல்ல உணவுகள். இவை இருதய வீக்கத்தினைத் தவிர்க்கும். இம்மாதிரி உணவுகள் எந்தெந்த பாதிப்புகளுக்கு அதிகம் உதவுகின்றது என்பதனைக் காண்போம்.

* ஆர்த்ரைட்டிஸ் (ரும ராய்ட்), * சோரியாஸிஸ், * ஆஸ்துமா, * உணவுக்குழல் வீக்கம், * குடல் வீக்கம், * நீரிழிவு, * உடல் பருமன், * இருதய பாதிப்பு, * சில வகை புற்று நோய்கள் போன்ற பல நோய்களுக்கு வீக்கம் தவிர்க்கும் உணவுகள் பெரிதும் உதவுகின்றன.

* அடர்ந்த நிறம் கொண்ட கீரைகள், * கருந்திராட்சை, * ப்ரோகலி, * காலிப்ளவர், * முட்டைகோஸ், * பீன்ஸ், பருப்பு வகைகள், * க்ரீன் டீ., * தேங்காய் (சிறிதளவு), * ஆலிவ் எண்ணெய்.

* மஞ்சள், பட்டை, அடர்ந்த சாக்லேட், ஆகியவை ஆகும்.



தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளாகக் கூறப்படுபவை 

பதப்படுத்தப்பட்ட அசைவம், அதிக சர்க்கரை சேர்த்த உணவு வகைகள், அடர்ந்த கொழுப்பு, வறுத்த, பொரித்த உணவு, வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா, க்ளூடென் தாவர எண்ணை, சிப்ஸ், அதிக மது, அதிக மாவுசத்து ஆகியவை ஆகும்.

* அதிக அளவில் காய்கறி, பழ வகைகள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதும்.

* அதிக கொழுப்பினைத் தவிர்ப் பதும்.

* சோடா, பாட்டிலில் அடைக்கப்பட்ட சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பதும்.

* தேவையான நீர் அருந்துவதும்.

* போதுமான கலோரி சத்து அளவில் உள்ள உணவு எடுத்துக் கொள்வதும்.

* ஓமேகா-3, மஞ்சள் இவற்றினை உணவில் சேர்ப்பதும்.

* போதுமான அளவு முறையான தூக்கமும்.

சிறந்த ஆரோக்கிய குறிப்புகளாக அறிவுறுத்தப்படுகின்றது.

மூட்டுவலி, சோரியாஸிஸ், ஆஸ்துமா இவை வீக்கம் கொடுக்கும் பாதிப்புடைய நோய்கள் எனப்படுவதால் மருந்துடன் மேற்கூறப்பட்டுள்ள குறிப்புகளையும் கடை பிடித்தாலே நல்ல முன்னேற்றத்தினை அடைய முடியும்.
Tags:    

Similar News