லைஃப்ஸ்டைல்

கொலஸ்டிராலை குறைக்க எடுக்க வேண்டிய முயற்சிகள்

Published On 2017-11-03 05:00 GMT   |   Update On 2017-11-03 05:00 GMT
அநேகருக்கு அதிக கொலஸ்டிரால் ரத்தத்தில் இருப்பது இன்றைய சூழலில் அதிகமாகவே காணப்படுகின்றது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அநேகருக்கு அதிக கொலஸ்டிரால் ரத்தத்தில் இருப்பது இன்றைய சூழலில் அதிகமாகவே காணப்படுகின்றது. அல்லது முறையான அளவிற்கு சற்று அதிகமாகவே இருக்கின்றது. காரணம் இவர்களது உணவு பழக்க முறை. இயற்கையாக எடுக்க வேண்டிய சில முயற்சிகளை அனைவரும் எடுக்க வேண்டும். வெறும் மருந்தை மட்டுமே தீர்வாக கொள்ளக் கூடாது.

* மோனோ மற்றும் பாலி கொழுப்பினை நல்ல கொழுப்பு என்கிறோம். கொட்டைகள், விதைகள், மீன், காய்கறிகள் இவை இதில் சேரும். இவை கெட்ட கொழுப்பினை நீக்க உதவும்.

* நார்சத்து உணவினை சேர்த்துக்கொள்ளுங்கள்.
* உடல் எடையினை குறையுங்கள்.
* சர்க்கரை, மைதா இவற்றினைத் தவிருங்கள்.

* மதுவினை குறையுங்கள் என்பதனை விட அடியோடு விட்டு விடுங்கள் என்பதே நல்ல அறிவுரையாக அமையும்.
* தினமும் 20-20 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* ஒமேகா 2 நன்கு உதவும். வால்நட் போன்றவை அதிக சத்து கொண்டவை. எனினும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.
* ஓட்ஸ், வாழை, கொழுப்பில்லாத தயிர் எடுத்துக்கொள்ளுங்கள்.



* நன்கு தூங்குங்கள்.
* புகை பிடித்தலை விட்டு விடுங்கள்
* கண்டிப்பாய் மன அழுத்தம் கூடாது.
* மாசுள்ள சூழ்நிலையில் இருக்காதீர்கள்.
* பூண்டை உணவில் மிக தாராளமாய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மூளையை நல்ல சுறுசுறுப்போடு வைத்திருந்தால் மூளையின் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன என்று ஆய்வுகள் இன்று சொல்கின்றன. வயது கூடும் பொழுது மூளையின் இறக்கும் செல்கள் உண்டு. புது செல்கள் புதியதாய் உருவாவதில்லை என்று சொன்ன விஞ்ஞானத்தில் இன்று சற்று மாறுதலாக ஓர் ஆய்வு இந்த செய்தியினை கொண்டு வந்துள்ளது. மறதி நோய் மிகப்பெரிய சவாலாகவே மருத்துவ உலகில் உள்ளது. அத்தகு நிலையில்
* நல்ல உடற்பயிற்சி
* சர்க்கரை அதிகம் எடுத்துக் கொள் ளாத உணவு
* அடிக்கடி உண்ணா விரதம் இருத்தல்
* அதிக மனஉளைச்சல் இன்றி இருத்தல்
* க்ரீன் டீ
* மஞ்சள் உணவில் சேர்த்தல்
* ஒமேகா 3 உணவில் சேர்த்தல்
இவை மூளை ஆரோக்கியமாய் இருக்க பெரிதும் உதவுவதாக அந்த ஆய்வு கூறுகின்றது.
Tags:    

Similar News