search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "diet tips"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நமது கலாரத்தில், பண்டிகைகளும் விசேஷங்களும் அதிகமாக நடக்கும்.
  • பலகாரங்கள், உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  நமது கலாரத்தில், பண்டிகைகளும் விசேஷங்களும் அதிகமாக நடக்கும். அனைத்து பண்டிகைகளும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கக் கூடியவை. அதேசமயம் பண்டிகைக்கு தயாரிக்கும் பலகாரங்கள், உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பண்டிகை நாட்களில் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி, உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு சில குறிப்புகள்:

  பண்டிகைக்கால பரபரப்பில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். அதனால் மதியம் உணவு சாப்பிடும் அளவு அதிகரிக்கும். இடையில் நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் எண்ணம் உண்டாகும். அதன் காரணமாக பண்டிகை பலகாரங்களை கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவீர்கள்.

  பண்டிகை நாட்களில் உடல் எடையை குறைப்பது சாத்தியம் இல்லாதது. உறவினர்களும், நண்பர்களும் இனிப்புகளை வழங்கும்போது உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. எனவே உடல் எடையை குறைக்கும் எண்ணத்தைத் தவிர்த்து, தற்போது இருக்கும் எடையை அதிகரிக்காமல் பராமரிப்பதற்கான வழிகளை கடைபிடியுங்கள்.

  பண்டிகை நாட்களிலும் உடற்பயிற்சியை தவிர்க்காதீர்கள். மிதமான உடற்பயிற்சிகள், உடங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு மன நிறைவையும் உண்டாக்கும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல் வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். காய்கறி சாலட், ஆரோக்கிய மான சிற்றுண்டி போன்றவற்றை சாப்பிடும்போது வயிறு சற்றே நிறைந்து இருக்கும். இதனால் விருந்தில் இருக்கும் தின்பண்டங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டாமல் தடுக்க முடியும். குளிர்பானங்கள் குடிப்பதில் சற்றே கவனமாக இருங்கள்.

  அதிகப்படியான சர்க்கரை ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் மதிய உணவில் அதிக கொழுப்பு உள்ள பொருட்களையும், இனிப்புகளையும் சாப்பிட்டீர்கள் என்றால். மற்ற நேரங்களில் எளிய உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு நாளுக்கு கூடுதலாக 500 கலோரிகள் எடுத்துக்கொண்டால். அது உங்கள் உடல் எடையில் விரைவாக எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். பண்டிகை நாட்களாகவே இருந்தாலும், ஆரோக்கிய மான உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுங்கள். எண்ணெய், கொழுப்பு நிறைந்த, மசாலா சேர்த்த உணவுகளை தவிர்த்து விடுவதே நல்லது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
  மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டுவிட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.

  அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை ஆறு மணிக்கு காபி அல்லது டீ, எட்டு மணிக்கு இரண்டு இட்லி, பத்து மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, நான்கு மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை ஆறு மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு எட்டு மணிக்கு மிதமான சிற்றுண்டி. இதுதான் சரியான உணவுப் பழக்கம்.

  சிலர் வாரத்தில் ஐந்து நாட்கள் இப்படிச் சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்குப் பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது.

  சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம். பொதுவாக முப்பது வயதைக் கடந்துவிட்டாலே சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும், விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.

  நம் உடலை உள்ளும், புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, விடிகிற பொழுது நல்லதாகவே முடியும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம். இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
  ×