லைஃப்ஸ்டைல்

தினமும் வெறும் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

Published On 2017-10-31 08:17 GMT   |   Update On 2017-10-31 08:17 GMT
தினமும் வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.
முக்கனிகளில் ஒன்றான வாழை நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்களை கொண்டது. ஆனால் அதனை மட்டுமே உண்டால் என்ன ஆகும்?

12 நாட்கள் தினமும் வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் மிகுந்த ஆரோக்கியம் உடையதாகவும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக நம்மில் பலரால் அதிகம் உண்ணப்படும் உணவு வகையாக வாழைப்பழம் விளங்குகிறது.

அதிக நுண்ணூட்டச் சத்துகள், குறைந்த விலை, இதையெல்லாம் தாண்டி, எல்லா காலகட்டத்திலும் எளிதாக கிடைக்கும் உணவாக இது இருப்பதால், அன்றாட உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

மற்ற உணவுகளை விடுத்து, வெறும் வாழைப்பழத்தை மட்டுமே உண்டு வந்தால் உடல் எடை குறையும். ஆனால், அன்றாட உணவுடன் சேர்த்து, வாழைப்பழங்களை உண்டால் உடல் எடை அதிகரிக்கும்.

வாழைப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்?



ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதோ அவ்வளவு சாப்பிடலாம். ஆனால் வாழைப்பழத்தைத் தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.

பச்சை கீரை வகைகள் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

சிலர் டீ, பால், காபி சாப்பிடலாமா என்று கேட்பார்கள். அவை எதுவும் கூடாது.

இத்தனை பழங்கள் தான் சாப்பிட வேண்டும் என்று கணக்கில்லை. உங்களுக்கு எத்தனை சாப்பிட்டால் நிறைவாக இருக்கிறதோ அவ்வளவு சாப்பிடலாம்.

இந்த டயட் மேற்கொள்ளும் போது. கட்டாயம் ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

முடிந்தால் ஒரு நாளைக்கு 20 நிமிடங்களாவது லேசான உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

உங்கள் உடல் எடையில் மிகச்சிறந்த மாற்றங்கள் தெரியும். வாழைக்கு உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது. இதில் இருக்கும் கலோரிகள், நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டுகளின் கலோரிகளுக்கு நிகரானது, ஆனால் இதில் நார்சத்து, தாதுக்கள், புரதம் என்று இருப்பதால் உடல் எடையை கூட்டாது.

மேலும் பெக்டின் எனும் வேதிப் பொருள் இதில் அடங்கியிருப்பதால், வாழையை சாப்பிட்டு பல மணி நேரங்களுக்கு நமக்கு பசி வராமல் இருக்க முடியும்.

உடலில் சர்க்கரை அளவு ஏறாமலும் வாழைப்பழங்கள் பார்த்துக் கொள்ளும். அதனால் இது ஒரு மிகச்சிறந்த டயட்டாகக் கருதப்படுகிறது.

Tags:    

Similar News