லைஃப்ஸ்டைல்

அதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்

Published On 2017-10-31 03:10 GMT   |   Update On 2017-10-31 03:10 GMT
அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பர்.
உங்களுக்கு ‘ஸ்லிம்‘ ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவதை விடுத்து, அதிகாலையிலேயே படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள வேண்டும் என்கிறது, ஒரு ஆய்வு.

அதிகாலையில் எழுபவர்கள் தங்களின் வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு, தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய விடிய வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினையாலும் அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.



மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களில் அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு தங்கள் துயில் கலைந்து எழுவதாக தெரிவித்தனர். நள்ளிரவையும் தாண்டி தாமதமாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் சராசரியாக 8 மணி 54 நிமிடத்திற்கு எழுவதாக கூறினர்.

வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் இளைஞர்கள், காலையில் 7 மணி 47 நிமிடத்திற்கு எழுந்திருப்பதாக தெரிவித்தனர். ஆய்வின் முடிவில், அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Tags:    

Similar News