லைஃப்ஸ்டைல்

யாரெல்லாம் முந்திரிப் பருப்பு சாப்பிட கூடாது?

Published On 2017-09-24 03:39 GMT   |   Update On 2017-09-24 03:39 GMT
முந்திரிப் பருப்பில் கொழுப்புச்சத்து மிக அதிகமாக இருப்பதால், அதிக அளவில் சாப்பிடக்கூடாது. யார் எல்லாம் முந்திரி பருப்பை சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.
முந்திரிப் பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனைச் சாப்பிடுவதால் அதிக கலோரி ஆற்றலும், நார்ச்சத்தும் கிடைக்கும். ஆனால் முந்திரிப் பருப்பில் கொழுப்புச்சத்து மிக அதிகமாக இருப்பதால், அதிக அளவில் சாப்பிடக்கூடாது.

* விளையாட்டு, நீச்சல் என அதிக உடல் உழைப்பைக் கொடுக்கும் குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் தினமும் முந்திரிப் பருப்பைச் சரியான அளவில் சாப்பிடலாம். 30 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் முந்திரி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

* குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் நாள் ஒன்றுக்கு 2 முந்திரிப் பருப்பைச் சாப்பிடலாம். 30 வயதுக்கு அதிகமானோர் வாரத்துக்கு ஒருமுறை 2 - 4 என்ற அளவில் சாப்பிடலாம்.

அதிக அளவிலான சத்துகளைத் தரவல்ல டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை வேலைக்குச் செல்வோர் ஒரு சிறிய பாக்ஸில் எடுத்துச்சென்று அலுவலக நேரத்தில் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக இதனைக் கொடுத்தனுப்பலாம். இவற்றின் விலை சற்றே அதிகம்தான் என்றாலும், துரித உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு முடிந்த அளவேணும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை சாப்பிடலாம்.
Tags:    

Similar News