லைஃப்ஸ்டைல்

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளால் நமக்கு ஆஸ்துமா வருமா?

Published On 2017-08-19 02:58 GMT   |   Update On 2017-08-19 02:58 GMT
நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலம் ஆஸ்துமா ஏற்படுமா என்றால், அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதே உண்மை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலம் ஆஸ்துமா ஏற்படுமா என்றால், அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதே உண்மை.

ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீட்டில் நாய், பூனை போன்ற பிராணிகளை வளர்ப்பதால், ஆஸ்துமாவின் தீவிரம் பல மடங்கு அதிகமாகக் கூடும்.

வளர்ப்புப் பிராணிகளின் உடலில் இருந்து உதிரும் செல்கள், ரோமம், எச்சில், சிறுநீர், மலக்கழிவு ஆகியவை காற்றில் கலந்து நாசி, சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

நாய், பூனை, முயல், கிளி, புறா, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளைத் தொட்டுத் தூக்கும்போதும், அவற்றோடு விளையாடும்போதும் அலர்ஜிப் பொருட்கள் நேரடியாகவே நம் உடலில் பட்டு அலர்ஜிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

இந்த அலர்ஜிப் பொருட்கள் நம் உடலுக்குள் சென்று ஆன்டிஜென்களாக செயல்படும். அப்போது ரத்தத்தில் இம்யூனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புரதம் உருவாகும்.



இது ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்கள் எனப்படும் ஒருவகை ரத்த வெள்ளையணுக்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லியூக்கோட்ரின் எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும்.

இவை, ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவாக மூக்கு ஒழுகுவது, தும்மல், அரிப்பு, தடிப்பு, சருமம் சிவந்து வீங்குவது, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

ஒவ்வாமைப் பிரச்சினை உள்ளவர்கள் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்காமல் இருப்பதே நல்லது.

அப்படியும் செல்லப்பிராணிகளை வளர்க்க விரும்பினால், வீட்டுக்கு வெளியே ஒரு தனியறையில் வளர்ப்பது நல்லது.
Tags:    

Similar News