லைஃப்ஸ்டைல்

நலம் தரும் உணவு பதார்த்தங்கள்

Published On 2017-08-15 03:13 GMT   |   Update On 2017-08-15 03:13 GMT
உடல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான, சத்தான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உடல் இயக்க செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன.
பார்வை கோளாறு, இதய நோய்கள், நீரிழிவு, உடல்பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகள் தற்போது அதிகரித்து கொண்டிருக்கின்றன. இன்று நாம் கடைப்பிடிக்கும் உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமே அதற்கு காரணம். உடல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான, சத்தான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உடல் இயக்க செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அன்றாட உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய பொருட்கள் சிலவற்றை பார்ப்போம்.

* ஏலக்காயை சமையலில் சேர்ப்பதோடு டீயில் கலந்தும் பருகலாம். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் ஏலக்காய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் ஒழுங்குபடுத்தும் பணியையும் செய்கிறது.

* வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சீரகம் அருமருந்தாக விளங்குகிறது. செரிமானம் சீராக நடைபெறுவதற்கு துணைபுரிகிறது. இரவில் சீரகத்தை நீரில் நனைய வைத்து மறுநாள் காலையில் நீரை பருகி வருவது உடல் நலனுக்கு நலம் சேர்க்கும்.

* நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு கிராம்பின் பங்களிப்பு இன்றியமையாதது. நுண்ணியிரி கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலும் கொண்டது. கிராம்பில் மாங்கனீசு அதிக அளவில் உள்ளடங்கியிருக்கிறது. அது வளர்சிதை மாற்றத்துக்கும் துணைபுரி கிறது.

* இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அது நோய் எதிர்ப்பு சக்தி நிரம்பியது. இதயநோய், நீரிழிவு, பக்கவாதம், புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் இஞ்சி பாதுகாக்கும்.
Tags:    

Similar News