லைஃப்ஸ்டைல்

கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Published On 2017-06-10 03:09 GMT   |   Update On 2017-06-10 03:09 GMT
கிரீன் டீயில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
சுருக்கமாக சொன்னால் ஒரு கப் 'கிரீன் டீ' 10 கப் ஆப்பிள் ஜூசுக்கு சமம். கிரீன் டீயின் உயர்தர ஆன்டி ஆக்சிட்டேன்டுகள் அபாயகரமான ப்ரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கிறது.

எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1. ரத்தத்தில் உள்ள கேட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

5. இதயநோய் வராமல் தடிக்கிறது.

6. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.



9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுப் பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. ஞாபகசக்தியை அதிகரிக்கிறது.

14. சருமத்தை பாதுகாத்து உடலை இளமையாக வைக்கிறது.

15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

16. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

17. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

18. உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
Tags:    

Similar News