வழிபாடு

ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று தேரோட்டம்

Published On 2022-08-01 02:01 GMT   |   Update On 2022-08-01 02:01 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும்.
  • தேர் திருவிழா காலை 9.05 மணிக்கு தொடங்குகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆடிப்பூர திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடி பூரம் நட்சத்திரத்தில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் வளாகத்திற்குள் தேர் திருவிழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டுக்கான விழாவுக்கு விமரிசையாக ஏற்பாடுகள் நடந்து, கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர்.

தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 9.05 மணிக்கு தேர் திருவிழா தொடங்குகிறது. இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நகராட்சி நிர்வாகம் தேவையான அடிப்படை வசதிகள், முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் மதியம 1 மணி வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

Tags:    

Similar News