என் மலர்

  நீங்கள் தேடியது "Srivilliputhur Andal temple"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
  • 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. சிறு வயதில் பெருமாள் மீது பக்தி கொண்ட ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடி இறைவனை கணவனாக அடைந்தார் என்பது வரலாறு.

  இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

  இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த ஜூலை 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு தினமும் காலை ஆண்டாள்-ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி மற்றும் இரவு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

  விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." என்ற கோஷம் எழுப்பியபடி சென்றனர்.

  முன்னதாக அமைச்ச ர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, தக்கார் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், செயல் அலுவலர் முத்துராஜா, நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், மாவட்ட நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் 4 ரத வீதிகளிலும் அசைந்தாடி சென்றது.

  2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்ட மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மேலும் திருவிழாவையொட்டி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும்.
  • தேர் திருவிழா காலை 9.05 மணிக்கு தொடங்குகிறது.

  ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆடிப்பூர திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

  ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடி பூரம் நட்சத்திரத்தில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.

  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் வளாகத்திற்குள் தேர் திருவிழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டுக்கான விழாவுக்கு விமரிசையாக ஏற்பாடுகள் நடந்து, கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

  சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர்.

  தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 9.05 மணிக்கு தேர் திருவிழா தொடங்குகிறது. இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நகராட்சி நிர்வாகம் தேவையான அடிப்படை வசதிகள், முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் மதியம 1 மணி வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெரியாழ்வார், ஐந்து பெருமாளுக்கும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 5-ம் திருவிழாவான நேற்று ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு பெரியாழ்வார் ஆண்டாள் கோவிலில் இருந்து புறப்பட்டு ஆடிப்பூர மண்டபத்தை வந்து அடைந்தார். அதன் பிறகு பெரிய பெருமாள், திருத்தங்கல் பெருமாள், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், காட்டழகர் சுந்தரராஜ பெருமாள், ரெங்கமன்னார், ஆகியோரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  ஆண்டாள் வீற்றிருக்க, பெரியாழ்வார், ஐந்து பெருமாளுக்கும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  அதன் பிறகு இரவு 10:30 மணிக்கு ஐந்து கருடசேவை நடந்தது. அப்போதுகருட வாகனத்தில் ரெங்கமன்னார், பெரிய பெருமாள், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், செண்பகத்தோப்பு சுந்தரராஜ பெருமாள், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் எழுந்தருளினர் கருட வாகனங்களில் மாட வீதிகள், ரத வீதிகள் வழியாக உற்சவம் நடைபெற்றது.

  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஒயிலாட்ட குழுவினர் மற்றும் கோலாட்ட குழுவினர் கோலாட்டம் ஆடியபடியும், பஜனை குழுவினர் பஜனை பாடிய படியும், வந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
  • சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்-ரங்க மன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, ஆண்டாள் பிறந்த தினத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

  கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் வளாகத்திலேயே தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

  விழா நிகழ்ச்சிகள் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  இதையொட்டி இன்று காலை ஆண்டாள்-ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்-ரங்க மன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

  ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதிகாலையில் கொடி பட்டம் மாடவீதி. 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது.

  பின்னர் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும் சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி கொடியேற்றினார். இன்று முதல் 31-ந் தேதி வரை தினமும் ஆண்டாள்-ரங்க மன்னார் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

  தேரோட்ட நிகழ்ச்சிகள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியதால் ஆண்டாள் கோவில் அமைந்துள்ள பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், ஆணையாளர் செல்லத்துரை, நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுகிறது.
  • தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது. இந்த திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆண்டாள் கோவில் தேரின் மேல் பகுதியில் இதுவரை மூங்கில் கொண்டு கொடுங்கைகள் இருந்தன.

  இதையடுத்து இரும்புகளை கொண்டு கொடுங்கை புதிதாக அமைக்க நிர்வாகம் முடிவு செய்தது. இந்த கொடுங்கைகளை ராஜபாளையம் ராம்கோ நிறுவனம் சார்பில் அமைத்து தர முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அந்த கொடுங்கைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டு தேரில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

  இதுகுறித்து ஆண்டாள் கோவிலை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்டாள் கோவில் தேரில் இதற்கு முன்பு இருந்த கொடுங்கைகள் மூங்கிலால் ஆனது. இதனை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ராம்கோ நிறுவனத்தினர் இரும்பினால் கொடுங்கைகளை செய்து கொடுத்துள்ளது. அது பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பல ஆண்டுகளுக்கு சேதமடையாமல் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 28-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது.
  • 1-ந்தேதி ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா நடைபெறுகிறது.

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை.

  இந்த ஆண்டு வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதையொட்டி திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


  28-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி, 30-ந்தேதி ஆண்டாள் சயன சேவை, வருகிற 1-ந்தேதி ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

  இதனையொட்டி தற்போது தேர் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல ஆடிப்பூர திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த திருவிழா அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பெரியாழ்வார் சன்னதியில் பெரியாழ்வார் சுவாதி திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தினமும் பெரியாழ்வார் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதுடன், வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

  கொடியேற்றத்தை முன்னிட்டு பெரியாழ்வார் சன்னதியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 29-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
  • 3-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். அதில் விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரிய ஆழ்வார் மற்றும் ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர்கள். விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரிய ஆழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி சுவாதி உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து தேங்காய் தொடும் நிகழ்ச்சி, சேனைத்தலைவர் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

  வருகிற 29-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் பெரியாழ்வார் வீதி உற்சவம் நடைபெறுகிறது. 3-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந்தேதி செப்பு தேரில் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வசந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.
  • ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு மலர் ஆடை, மலர் கொண்டை அணிவிக்கப்படுகிறது.

  ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்து நாடகசாலை தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

  கோடைகாலம் என்பதால் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு மலர் ஆடை மற்றும் மலர் கொண்டை அணிவிக்கப்படுகிறது. மலர் ஆடை மற்றும் மலர் கொண்டை அணிந்து வசந்த மண்டபத்தில் காட்சி அளிக்கும் ஆண்டாள், ரெங்கமன்னாரை ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வசந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை கோலம் அழிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். #LSPolls SrivilliputhurTemple
  ஸ்ரீவில்லிபுத்தூர்:

  பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புராணங்களை விளக்கக்கூடிய ஓவியங்கள் மற்றும் பல்வேறு வகையான பூக்கள் நுழைவு வாயில் மற்றும் உள் பிரகாரத்தில் வரையப்பட்டிருந்தது.

  அதில் தாமரைப்பூக்கள் பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் என கருதிய ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அதனை அழிக்குமாறு கோவில் செயல் அலுவலரிடம் கூறி உள்ளார்.

  இதனைத்தொடர்ந்து கோவில் பணியாளர்கள் சுண்ணாம்பு கலவையால் தாமரை பூ சின்னத்தை அழித்தனர். அந்த இடத்தில் வேறு கோலம் வரையப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

  இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில், தாமரை பூ ஓவியத்தை அழித்தது கண்டனத்துக்குரியது. தாமரை என்பது தாயாரின் அவதார பூ. கோவிலுக்குள் வந்து ஓவியங்களை அழிக்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை. இந்த வி‌ஷயத்தில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

  தாமரை கோலம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் வேறு கோலம் வரையப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டது குறித்து விருதுநகர் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சிவஞானத்திடம் கேட்டபோது, ஆண்டாள் கோவிலில் தாமரை பூ கோலம் அழிக்கப்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம்.

  கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நிரந்தரமாக போடப்பட்ட பெயிண்ட் கோலத்தை அழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

  தாமரை சின்னம் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வரக்கூடும் என கோவில் நிர்வாகத்திடம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவுரைதான் கூறியுள்ளார். கோவில் நிர்வாகத்தினர்தான் கோலங்களை அழித்துள்ளனர். யாரும் கோவில் நிர்வாகத்திடம் வற்புறுத்தவில்லை. தாமரை பூ கோலம் அழிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றார். #LSPolls SrivilliputhurTemple
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  பூமிப்பிராட்டியாம் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர நன்னாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும்.

  இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 9-ம் நாளான நேற்று தமிழ்நாட்டின் 2-வது பெரிய தேரான ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலை சாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, தனித்தனி தோளுக்கினியான்களில் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. தேரில் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

  காலை 7.20 மணிக்கு தேரோட்டத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

  தேர் 4 ரத வீதிகளின் வழியே வந்து காலை 9.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து ஆடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

  வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 2 புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு தேரினை தள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

  தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னார்.


  ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் திரண்டு தரிசனம் செய்தனர்.

  தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது.

  மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

  குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் ‘ஹெலி கேமரா‘ மூலம் ரத வீதிகள் கண்காணிக்கப்பட்டன.

  தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print