வழிபாடு

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது

Published On 2022-08-24 04:48 GMT   |   Update On 2022-08-24 04:48 GMT
  • 28-ந் தேதி அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், வில்லிசை நடக்கிறது.
  • முக்கிய கொடை விழா 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்க்கிழமை காலையில் கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

வருகிற 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், வில்லிசை, மறுநாள் இரவு 8 மணிக்கு அம்மன் மாகாப்பு தரிசனம், வில்லிசை நடக்கிறது. முக்கிய கொடை விழா 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

அன்று பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு குத்து விளக்கு பூஜை, வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை, தொடர்ந்து மத்தாப்பு வாண வேடிக்கை மேல தாளங்களுடன் கற்பகப் பொன் சப்பரத்தில் அம்மன் நகர் உலா செல்லுதல் நடைபெறும்.

விழாவில் காலை, மதியம், இரவு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. 31-ந் தேதி காலை 8 மணிக்கு உலா சென்ற அம்மன் கோவில் வந்து அமர்தல், காலை 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு கச்சேரி நடைபெறுகிறது. கொடை விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News