என் மலர்

  நீங்கள் தேடியது "kodai vizha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூப்படைப்பு நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.
  • ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

  நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பால்பண்ணை சந்திப்பு அருகே அமைந்துள்ள நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் ஆவணி மாத கொடை விழா கடந்த 4-ந்தேதி தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. 10-ம்நாள் விழாவான கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு நிர்மால்ய தீபாராதனை, 6 மணிக்கு கன்னியாகுமரி சென்று தீர்த்தம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு அபிஷேகம், 1 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, நள்ளிரவு 12.15 மணிக்கு சுடலை மாடசாமிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு ஊட்டுப்படைப்பு ஆகியவை நடந்தது.

  நிறைவு நாளான நேற்று மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து நடைபெற்ற பூப்படைப்பு நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர மேயர் மகேஷின் மனைவி மேகலா மகேஷ், நாஞ்சில் முருகேசனின் மனைவி தங்க தேவிகா, 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா உள்பட ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பூப்படைப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி, அன்னதானம் ஆகியவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நற்பணி மன்ற தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் செயலாளர் வேலு, பொருளாளர் சிவலிங்கம், துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் நற்பணி மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

  மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவுக்கு கடந்த 6-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 11-ந் தேதி கோவில் கொடைவிழா தொடங்கியது. எட்டாவது நாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வில்லிசை, கும்ப கரகாட்டம், 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் கோவிலில் சேர்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு வானவேடிக்கை ஆகியவை நடந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு பொன் சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  நேற்று காலை 8 மணிக்கு மஞ்சள் பால் நீராட்டுதல் நடந்தது. காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சினிமா இசை குழுவினருடன் பாட்டு கச்சேரி நடந்தது.

  விழா ஏற்பாடுகளை மாவடி பண்ணை ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மஞ்சள் பெட்டி ஊர்வலத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
  • சுவாமி மஞ்சள் நீராடுதல் நடந்தது.

  தென் மாவட்டங்களில் உள்ள சுடலை கோவில்களில் புகழ்பெற்றது திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த 21-ந்தேதி தொடங்கி 6 நாட்கள் நடந்தது.

  விழா நாட்களில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம், கோலப்போட்டி, சமய சொற்பொழிவு, பல்சுவை கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரிகள், நாடகம், மாறுவேட போட்டி, 1008 சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை, மெகந்தி போட்டி, சமையல் போட்டி, அலங்கார பூஜை, வில்லிசை, அற்புதவினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

  விழாவின் சிகர நாளான நேற்று காலை மன்னர் ராஜா கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க கரகாட்டம், கதகளியாட்டம், பொய்க்கால் யானை முன்செல்ல புறப்பட்ட மஞ்சள்பெட்டி ஊர்வலம் முக்கிய வீதிவழியாக சென்று கோவிலை அடைந்தது. தொடர்ந்து சுவாமி மஞ்சள் நீராடுதல் நடந்தது.

  முன்னதாக நடந்த மஞ்சள் பெட்டி ஊர்வலத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இரவு கோவில் வளாகத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

  விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கொடை விழாவை முன்னிட்டு நேற்று திசையன்விளையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 28-ந் தேதி அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், வில்லிசை நடக்கிறது.
  • முக்கிய கொடை விழா 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

  ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்க்கிழமை காலையில் கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

  வருகிற 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், வில்லிசை, மறுநாள் இரவு 8 மணிக்கு அம்மன் மாகாப்பு தரிசனம், வில்லிசை நடக்கிறது. முக்கிய கொடை விழா 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

  அன்று பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு குத்து விளக்கு பூஜை, வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை, தொடர்ந்து மத்தாப்பு வாண வேடிக்கை மேல தாளங்களுடன் கற்பகப் பொன் சப்பரத்தில் அம்மன் நகர் உலா செல்லுதல் நடைபெறும்.

  விழாவில் காலை, மதியம், இரவு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. 31-ந் தேதி காலை 8 மணிக்கு உலா சென்ற அம்மன் கோவில் வந்து அமர்தல், காலை 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு கச்சேரி நடைபெறுகிறது. கொடை விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதியம் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
  • இரவு 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

  ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பொற்றை இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், சுத்திகலச பூஜை, சத்தி பூஜை நடைபெறுகிறது. இதனை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் மேல்சாந்தி கிருஷ்ணபட்டர் நடத்துகிறார்.

  9 மணிக்கு வடக்கூர் அகலிகை ஊற்றிலிருந்து பால்குடம், பறக்கும் காவடி புறப்பட்டு கோவிலை அடைகிறது. 11 மணிக்கு கலச பூஜை, மதியம் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. இதனை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைக்கிறார்.

  மாலை 5 மணிக்கு திருவிளக்குபூஜை, இரவு 9 மணிக்கு பொங்கல் வழிபாடும், அலங்கார தீபாராதனையும் அதனை தொடர்ந்து பலியிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. கொடைவிழா ஏற்பாடுகளை பொற்றை இசக்கியம்மன் கோவில் பூசாரிகள் பாஸ்கர், வெற்றிவேல் தலைமையில் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
  • இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

  ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவிலில் ஆடி கொடைவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 3 மணிக்கு மாகாப்பு அலங்காரம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.

  நாளை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள், காலை 7 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, 1.30 மணிக்கு அன்னதானம், இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 11 மணிக்கு பூப்படைப்பு, நள்ளிரவு 12 மணிக்கு ஊட்டு படைப்பு, 1 மணிக்கு பூக்குழி இறங்குதல் ஆகியவை நடக்கிறது.

  விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் தங்கம், செயல் அலுவலர் பொன்னி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • படைப்பு பூஜை தீபாராதனைக்கு பின்னர் அன்னதானம் நடக்கிறது.
  • நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

  திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. அன்று இரவு ஜெய விநாயகருக்கும், சந்தணமாரி அம்மனுக்கும் மாக்காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஜெய விநாயகருக்கும், சந்தணமாரி அம்மனுக்கும் சந்தன காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

  கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 9.45 மணிக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பால்குடம் எடுத்த பக்தர்கள் கோவில் முன்பு இருந்து புறப்பட்டு ஊர்வலமாக முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சந்தணமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு முளைப்பாரி வீதி உலா நடந்தது. இரவு 12 மணிக்கு சந்தணமாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. கொடை விழா காலங்களில் பக்தர்களுக்கு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

  கொடை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு படைப்பு பூஜை தீபாராதனைக்கு பின்னர் அன்னதானம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் கும்பம் வீதி உலாவும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. விழா நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் திரைபட மெல்லிசை கச்சேரி, வில்லிசை, கரகாட்டம், இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் பாஸ்கர், செயலாளர் நடராஜன், பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் தனசேகரன், துணை செயலாளர் சுந்தரேசன், கணக்காளர் பிரபு, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செல்வ முருகன், செந்தில் ஆறுமுகம், அமிர்த குண விநாயகம், ராஜேஷ் கண்ணன், கணேசன், சுரேஷ், விக்னேஷ், அஜெய், சுபாஷ் முரளி ஆகியோர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், புஷ்பாஞ்சலியும் நடந்தது.
  • இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

  நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் அமைந்துள்ள நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலில் ஆவணி மாத கொடை விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான கால்கோள் நாட்டு விழா கோவில் வளாகத்தில் நேற்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மேயர் மகேஷ், அவருடைய மனைவி மேகலா மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

  முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகமும் நடந்தது.

  அதன்பிறகு பகல் 1 மணிக்கு தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும், புஷ்பாஞ்சலியும், மீண்டும் இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேலு மற்றும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகுடம் தட்டி சுவாமி மயான எல்லை குறிப்பும், உச்சி கால பூஜைகளும் நடந்தது.
  • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

  கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளியம்மன், மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் ஆடிக் கொடை விழா மற்றும் பூக்குழி விழா நடைபெற்றது. முதல் நாள் மாலை 4.30 மணிக்கு வெண்கல அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. இரவு நையாண்டி மேளமும் கரகாட்டமும் நடைபெற்றது. 2-ம்நாள் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், வேள்வி பூஜைகளும், அபிஷேக ஆராதனை பூஜைகளும் நடந்தது. மதியம் 12 மணிக்கு மகுடம் தட்டி சுவாமி மயான எல்லை குறிப்பும், உச்சி கால பூஜைகளும் நடந்தது.

  மாலை 6 மணிக்கு பூரண கும்பம் ஏற்றி, முளைப்பாரி ஊர்வலம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலம் நடந்தது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை திறளை பூஜைகள் மற்றும் பூக்குழி திருவிழா நடைபெற்றது. பூசாரி சங்கரன் அக்னி சட்டி எடுத்தும், கையில் தீப்பந்தங்களுடனும், கையில் இரட்டைக் குழந்தைகளை வைத்துக்கொண்டும் பூக்குழி இறங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  • இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

  குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இரவு10 மணிக்கு வில்லிசை நடைபெற்றது. நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முத்தாரம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

  பகல் 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், இரவு 8 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

  இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், 9 மணிக்கு சிறப்பு மகுடம், 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், வில்லிசை, அன்னதானம், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

  ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ளது ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில்.
  • ஆடிகொடை விழா இன்று தொடங்கி 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

  குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் ஆடிகொடை விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று இரவு 8 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, இரவு 10 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  நாளை காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், காலை 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.15 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

  மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 8 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள், இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் மற்றும் சிறப்பு மகுடம் குறவன், குறத்தி, கரகாட்டம் நடைபெறுகிறது.

  3-ந் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், காலை 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.30 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

  விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையரும் தக்காருமான சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print