search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காட்டாத்துறை, குழிவெட்டான்விளை பராசக்தி அம்மன் கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது
    X

    காட்டாத்துறை, குழிவெட்டான்விளை பராசக்தி அம்மன் கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது

    • இந்த விழா 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.

    காட்டாத்துறை குழிவெட்டான்விளை பராசக்தி அம்மன் கோவில் கொடைவிழா இன்று(புதன்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 7 மணி மற்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு பஜனை, 6.45 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7 மணி மற்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. விழாவில் நாளை(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு பஜனை, இரவு 7.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 8.30 மணிக்கு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு லலிதா ஸ்கஸ்ரநாம அர்ச்சனை, இரவு 7 மணிக்கு இந்து சமய கருத்தரங்கம், 8.30 மணிக்கு அய்யாவழி இன்னிசை விருந்து, 28-ந்தேதி மதியம் 2 மணிக்கு யானை மீது அம்மன் எழுந்தருளி பவனி வருதல், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 29-ந்தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாடு, 10.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு மஞ்சள்பால் குளித்தல், மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வினோத், துணைத்தலைவர் அஜித், செயலாளர் விஜித், துணை செயலாளர் சஜின், பொருளாளர் மத்தியாஸ், ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், கவுரவ தலைவர் வின்சென்ட் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×