தூத்துக்குடி இசக்கியம்மன் கோவில் கொடை விழா

தூத்துக்குடி -பாளை நெடுஞ்சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் கீதாஜீவன் அன்னதானத்தை தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
அமைச்சர் கீதாஜீவன் அன்னதானத்தை தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி -பாளை நெடுஞ்சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வருகை தந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அம்மன் தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, கோவில் நிர்வாக கமிட்டியை சேர்ந்த பொன்ராஜ், பாண்டியராஜன், பொன்இசக்கி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com