search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா 21-ந்தேதி நடக்கிறது
    X

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா 21-ந்தேதி நடக்கிறது

    • கொடை விழா 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடந்தது.
    • 25-ந்தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்தகோவிலிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வதால் 'பெண்களின் சபரிமலை' என போற்றப்படுகிறது.

    இங்கு கடந்த 5-ந் தேதி மாசி கொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எட்டாம் கொடை விழா நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    எட்டாம் கொடை விழாவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழாவின் தொடர்ச்சியாக 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.

    Next Story
    ×