வழிபாடு

முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.

மாவடி பண்ணை கோவில் கொடை விழா: முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் வீதிஉலா

Published On 2022-09-15 04:56 GMT   |   Update On 2022-09-15 04:56 GMT
  • பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவுக்கு கடந்த 6-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 11-ந் தேதி கோவில் கொடைவிழா தொடங்கியது. எட்டாவது நாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வில்லிசை, கும்ப கரகாட்டம், 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் கோவிலில் சேர்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு வானவேடிக்கை ஆகியவை நடந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு பொன் சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று காலை 8 மணிக்கு மஞ்சள் பால் நீராட்டுதல் நடந்தது. காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சினிமா இசை குழுவினருடன் பாட்டு கச்சேரி நடந்தது.

விழா ஏற்பாடுகளை மாவடி பண்ணை ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News