ஆன்மிகம்
வீடுகளில் பெண்கள் பொங்கல் வழிபாடு

சித்ரா பவுர்ணமியையொட்டி வீடுகளில் பெண்கள் பொங்கல் வழிபாடு

Published On 2020-05-08 06:34 GMT   |   Update On 2020-05-08 06:34 GMT
குமரி மாவட்டத்தில் சித்ரா பவுர்ணமியான நேற்று கொரோனாவில் இருந்து உலக மக்களை காக்க காளிமலை பத்திரகாளி அம்மனை வேண்டி வீடுகளில் பொங்கல் வழிபாடு நடந்தது.
குமரி மாவட்டத்தில் சித்ரா பவுர்ணமியான நேற்று கொரோனாவில் இருந்து உலக மக்களை காக்க காளிமலை பத்திரகாளி அம்மனை வேண்டி வீடுகளில் பொங்கல் வழிபாடு நடந்தது. அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தினர்.

இதேபோல ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம், நாகர்கோவில், பட்டகசாலியன் விளை, வடசேரி, ஆறுகாணி, பத்துகாணி, காளிமலை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் முன்பு பத்திரகாளி அம்மன் படம் வைத்து பெண்கள் பொங்கல் வழிபாடு செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சேவாபாரதி அமைப்பின் பொறுப்பாளர்கள் பரமேஸ்வரன், டாக்டர் அருண்குமார், முத்துக்குமார், ராஜாம் ஆகியோர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News