ஆன்மிகம்
நாகராஜா கோவில்

நாகராஜா ஆலயத்தில் சிவலிங்கம் வந்தது எப்படி?

Published On 2020-03-25 06:05 GMT   |   Update On 2020-03-25 06:05 GMT
நாகராஜா ஆலயத்தில் நாகர் சன்னதிக்கும் அனந்த கிருஷ்ணன் சன்னதிக்கும் இடையே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது.
நாகராஜா ஆலயத்தில் நாகர் சன்னதிக்கும் அனந்த கிருஷ்ணன் சன்னதிக்கும் இடையே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கம் காசிவிசுவ நாதர் என்று அழைக்கப்படுகிறார். காசியில் இருந்து கொண்டு வரப்பட்டு இந்த லிங்கம் நிறுவப்பட்டு உள்ளது. இதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது.

நாகராஜா ஆலயம் அமைந்துள்ள பகுதி வயல் மற்றும் பூந்தோட்டம் பகுதியாக இருந்ததாகும். இதனால் நூற்றுக்கணக்கான பாம்புகள் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலயம் விரிவாக்கம் பெற்ற பிறகும் கூட பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் பயந்தபடியே சாமி தரிசனம் செய்து சென்றனர்.

சர்ப்பங்களின் எண்ணிக் கையையும் தொல்லையையும் குறைக்க என்ன செய்யலாம் என்று பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது பாம்பை உயிர் ஆபரணமாக அணிந்திருந்திருக்கும் சிவபெருமானின் லிங்க ரூபத்தை இங்கு பிரதிஷ்டை செய்தால் தீர்வு ஏற்பட்டுவிடும் என்று தெரியவந்தது. இதையடுத்து காசியில் இருந்து லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பிறகு தான் நாகராஜா ஆலயத்தில் பாம்புகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

Tags:    

Similar News