ஆன்மிகம்
திருப்பைஞ்சீலி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நவசண்டி யாகம்

திருப்பைஞ்சீலி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நவசண்டி யாகம்

Published On 2020-02-18 06:12 GMT   |   Update On 2020-02-18 06:12 GMT
திருப்பைஞ்சீலியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 8 ஆண்டுகளானதை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும் நவசண்டி யாகம் நடைபெற்றது.
திருப்பைஞ்சீலியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 8 ஆண்டுகளானதை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும் நேற்று நவசண்டி யாகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது.

மாலையில் சண்டிகா பரமேஸ்வரி பூஜையும், சப்தசதி பாராயணம் மற்றும் தீபபூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. நேற்று காலை நவசண்டி யாகம் நடைபெற்றது. இதற்காக 13 அடி ஆழமும், 7½ அடி விட்டமும் கொண்ட யாககுண்டத்தில் 1,008 மூலிகை பொருட்கள், நவதானியங்கள், பழ வகைகள், நெய் உள்ளிட்ட யாக பொருட்கள் குண்டத்தில் போடப்பட்டன.

இதைத்தொடர்ந்து சுவாசினி பூஜை, நவ கன்னிகா பூஜை, வடுகபைரவர் பூஜையும், வஸோர்தாரா ஹோமம், மகா பூர்ணாஹூதி தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மதியம் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொணடு சாமி தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News