ஆன்மிகம்
பஞ்ச சக்தி ஆலயங்கள்

பஞ்ச சக்தி ஆலயங்கள்

Published On 2019-10-11 06:36 GMT   |   Update On 2019-10-11 06:36 GMT
பஞ்ச சக்தி என்று சொல்லக்கூடிய வீரசக்தி, யோக சக்தி, வேக சதி, போக சக்தி, பால சக்தி என்ற 5 சக்திக்கும் 5 கோவில்கள் ஒரே ஊரில் அமைந்துள்ள பாக்கியத்தை பெற்றுள்ள ஊர் குலசேகரன்பட்டினம்.
பஞ்ச சக்தி என்று சொல்லக்கூடிய வீரசக்தி, யோக சக்தி, வேக சதி, போக சக்தி, பால சக்தி என்ற 5 சக்திக்கும் 5 கோவில்கள் ஒரே ஊரில் அமைந்துள்ள பாக்கியத்தை பெற்றுள்ள ஊர் குலசேகரன்பட்டினம்.

வீர சக்தி

பஞ்ச சக்தியான வீர சக்திக்கு குலசேகரன்பட்டினம் வடக்கூரில் வீர மனோகரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அம்மன் ஒரு முகம், 8 கைகளுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

யோக சக்தி

யோக சக்திக்கு இங்குள்ள கருங்காளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு 5 முகம், 10 கைகளுடன் தாய் காட்சியளிக்கிறாள்.

வேக சக்தி

வேக சக்திக்கு இங்கு முப்பிடாதி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு அம்மன் 3 முகம், 6கரங்களுடன் காட்சியளிக்கிறாள்.

போக சக்தி

போக சக்திக்கு முத்தாரம்மன் ஆலயம் உள்ளது. இங்கு அம்மன் ஒரு முகம், 4 கைகளுடன் கருணையுடன் அருள்பாலிக்கிறாள்.

பால சக்தி

பால சக்திக்கு இங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஒரு முகம், 2 கைகளுடன் காட்சி தருகிறாள் அம்பாள். இவ்வாறு அம்மன் 5 கோவில்களில் அருள்பாலிப்பது குலசையின் சிறப்பு. இதுபோன்ற அமைப்புகள் வேறு எங்கும் இல்லை. மேலும் பத்திரகாளி அம்மன், வண்டி மறிச்சி அம்மன், சுந்தராட்சி அம்மன், 3 முகம் கொண்ட முத்தாரம்மன், பெருமாள் சுவாமி அம்மன், சிதம்பரேஸ்வரர் கோவில், இசக்கியம்மன், விநாயகர் கோவில் உள்பட 101 கோவில்கள் குலசேகரன்பட்டினத்தில் இருப்பதாகவும், ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News