ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி

Published On 2019-05-19 05:07 GMT   |   Update On 2019-05-19 05:07 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருடத்திற்கு 5 முக்கிய விஷேச நாட்களில் திறக்கப்படும் கிழக்குவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலில் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அன்னதானம், இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான நேற்று அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பிறகு காலை 7 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் கடல் பகுதியில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வருடத்திற்கு 5 முக்கிய விஷேச நாட்களில் திறக்கப்படும் கிழக்குவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலில் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்பிறகு கொடி இறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News