ஆன்மிகம்

பாடியநல்லூர் முனீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2019-03-25 08:00 GMT   |   Update On 2019-03-25 08:00 GMT
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பர்மா நகரில் உள்ள முனீஸ்வரர் அங்காளஈஸ்வரி கோவில் வீதிஉலா நடை பெற்றது.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பர்மா நகரில் உள்ள முனீஸ்வரர் அங்காளஈஸ்வரி கோயில் 54-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. 10 நாட்கள் அம்மன் வீதிஉலா நடை பெற்றது. நேற்று மாலை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வணங்கி கோயில் மைதானத்தில் அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் தீ மிதித்தனர்.

ஆலய நிர்வாகிகள் தலைவர் எஸ்.மனோகரன், செயலாளர் ஜி.ராஜேந்திரன், பொருளாளர் கே.வேலாயுதம் கோயில் அறங்காவலர்கள் குழு தலைவரும் முன்னாள் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவருமான பி.கார்மேகம் மற்றும் கோயில் நிர்வாகிகள், அறங்காவலர் குழு நிர்வாகிகள் கே.சந்துரு, எஸ்.கே.சேகர், எஸ்.எஸ்.எஸ்.சரவணன், ஜி.மச்சவள்ளி, ஜி.வீரையா, ஏ.ஆனந்தன், அன்னதான குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

மாதவரம் துணை கமி‌ஷனர் ரவளி பிரியா, தலைமையில் புழல் உதவி கமி‌ஷனர் ரவி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தமிழழகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா நடைபெற்ற 10 நாட்களும் கோயில் சார்பில் அன்னதானமும், வான வேடிக்கைகளும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
Tags:    

Similar News