ஆன்மிகம்

சந்திமறித்தம்மன் கோவிலில் 2,007 திருவிளக்கு பூஜை

Published On 2019-03-16 03:13 GMT   |   Update On 2019-03-16 03:13 GMT
தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத பிறப்பான நேற்று 2,007 திருவிளக்கு பூஜை நடந்தது.
தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 1-ந்தேதி ஜோதி வழிபாட்டு குழுவின் சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் பங்குனி மாத பிறப்பான நேற்று 2,007 திருவிளக்கு பூஜை நடந்தது.

இதையொட்டி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. அம்பாள் ரெங்கமன்னர், ஆண்டாள் திருக்கோலத்திலும், உற்சவர் அம்பாள் திருமணச்சேரி கல்யாண சுந்தரேசுவரர், கோகிலாம்மாள் திருமண கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மாலை 6-30 மணிக்கு கோவில் வளாகத்திலும், தச்சநல்லூர் மெயின் ரோட்டிலும் 2,007 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு செய்து அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, தச்சநல்லூர் மெயின் ரோட்டில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
Tags:    

Similar News