ஆன்மிகம்
ராகுபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்ததையும், கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

நெல்லை கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

Published On 2019-02-14 03:59 GMT   |   Update On 2019-02-14 03:59 GMT
நெல்லை கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜோதிடத்தில் சர்ப்ப கிரகங்களாகிய ராகு, கேது பெயர்ச்சி நேற்று நடந்தது. ராகு கடக ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கும், கேது மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்ந்தனர். இதையொட்டி மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், நல்ல மழை பெய்து பூமி செழிக்கவும், ராகு தோஷம் நீங்கவும் நெல்லையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டை சிவன் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் ராகு-கேது பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதேபோல் நெல்லை பேட்டையில் உள்ள திருவேங்கடநாதபுரம், சங்காணியில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாளையங்கோட்டை பெருமாள் மேலரதவீதியில் உள்ள பகவதியம்மன் கோவிலுடன் இணைந்த ராகு பகுவான் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி பூஜையையொட்டி நவக்கிரக ஹோமம், அர்ச்சனை தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ராகு பகவானுக்கு உளுந்து சாதம் நெய்வேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News