ஆன்மிகம்
கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை.

மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்

Published On 2019-01-24 03:17 GMT   |   Update On 2019-01-24 03:17 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திருவிழாவையொட்டி தினமும் விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகர் வீதி உலா வருகிறார்கள்.

இதைதொடர்ந்து அடுத்த மாதம் 10-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சித்திரை வீதிகளில் வலம் வந்து காட்சி அளிக்கின்றனர். மார்ச் 1-ந்தேதி கணக்கு வாசித்தல் நிகழ்ச்சி நடந்து திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா போன்ற விஷேச நிகழ்ச்சிகள் பதிவு செய்ய முடியாது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News