ஆன்மிகம்

ரகுநாதபுரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

Published On 2018-11-17 08:18 GMT   |   Update On 2018-11-17 08:18 GMT
ராமநாதபுரம் ரகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இன்று கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம்.

இன்று கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பக்தர்களுக்கு தலைமை குருக்கள் மோகன் மாலை அணிவித்தார்.

கோவில் சன்னதி இன்று காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா சன்னதிகளில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த கோவிலில் கார்த்திகை முதல் நாளிலிருந்து 48 நாட்களும் இரவு பஜனை, கூட்டுப்பிரார்த்தனை, அன்னதானம் நடைபெறும்,

கலியுக வரதன், கண்கண்ட தெய்வம் ஐயப்பன் அருளால் நாம் கஜா புயலில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளோம். வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் இதுவரை கடைப் பிடித்துவரும் நடைமுறையின்படி 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இருமுடி கட்டுவதில்லை என்றார்.
Tags:    

Similar News