ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 5 அணையா விளக்குகள்

Published On 2018-09-22 06:28 GMT   |   Update On 2018-09-22 06:28 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 5 அணையா விளக்குகளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 5 அணையா விளக்குகளை காணிக்கையாக நேற்று வழங்கினார்.

இதுகுறித்து அணையா விளக்குகளை வடிவமைத்த ஸ்தபதி ஆர்.டி.செல்வராஜ் கூறுகையில், பித்தளையால் ஆன இந்த 5 அணையா விளக்குகள் ஒவ்வொன்றும் 4½ அடி உயரமும், 2 அடி அகலமும் 40 கிலோ எடையும் கொண்டவை. இந்த அணையா விளக்குகளின் கீழ்பகுதி சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் விளக்குகள் எந்த சன்னதியில் வைக்கப்பட்டுள்ளதோ அந்த சுவாமிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்ற 3 பக்கங்களில் முறையே சங்கு, சக்கரம், பத்மபூ பொறிக்கப்பட்டுள்ளன. விளக்கின் மேல்பகுதி தாமரைப்பூ வடிவில் அமைக்கப்பட்டு அதன் உச்சியில் சங்கு, சக்கரம் இடம்பெற்றுள்ளது.

இந்த 5 அணையா விளக்குகள் ரெங்கநாதர் சன்னதி, தாயார் சன்னதி, கருடாழ்வார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ரெங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன என்றார். 
Tags:    

Similar News