ஆன்மிகம்

வித்தியாசமான விநாயகர்கள்

Published On 2018-09-14 06:04 GMT   |   Update On 2018-09-14 06:04 GMT
ஒவ்வொரு ஊர்களிலும் விநாயகர்கள் வித்தியாசமாக உருவத்தில் காட்சி அளிக்கிறார். அந்த வகையில் எந்த ஊரில் எந்த உருவில் காட்சி அளிக்கிறார் என்று பார்க்கலாம்.
திருவாரூர் அருகே உள்ள திலதைப் பதியில் தும்பிக்கை இல்லாத, நர முக விநாயகரை தரிசிக்கலாம்.

திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், கையில் கரும்பேந்தி காணப்படுகிறார்.

திருச்செங்கோட்டில் மனித முகத்தோடு அருளும் விநாயகரை வழிபடலாம்.

சங்கரன்கோவிலில் நாகபாச விநாயகர், தனது கையில் பாம்புடன் காட்சியளிக்கிறார்.

தக்கலை அருகே உள்ள கேரளபுரம் விநாயகர், ஆறு மாதம் கறுப்பாகவும், ஆறு மாதம் வெள்ளை நிறத்திலும் காட்சி தருகிறார்.

மாங்காடு வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் மாங்கனி ஏந்தி இருக்கிறார்.

தில்லைக் காளி ஆலயத்தில் ஏழு கரங்களுடன் கூத்தாடும் விநாயகரை தரிசிக்கலாம்.

ராமேஸ்வரம் ஆலயத்தின் கொடிமரம் அருகே 18 கரங்கள் கொண்ட விநாயகர் அருள்கிறார்.

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆறுமுகங்களுடன் அருள்பாலிக்கிறார்.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் இரண்டு கைகளிலும் கொழுக்கட்டையை ஏந்தியிருக்கிறார்.

கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் பத்து கரங்களைக் கொண்ட விநாயகர் அருள்புரிகிறார். 
Tags:    

Similar News