ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ காலபைரவரின் லீலைகளை புரிந்து கொண்டு கோபமுற்ற ஆஞ்சநேயர்

Published On 2024-05-28 16:31 IST   |   Update On 2024-05-28 16:31:00 IST
  • இந்த தலம் ஸ்ரீ கால பைரவரின் ஷேத்திரம் ஆயிற்றே அவர்தான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டார்.
  • தான் கொண்டு வந்த சுயம்புலிங்கத்தை அவரோடு வைத்துக் கொள்ளவே இத்தனை நாடகங்கள் ஆடி இருக்கின்றார்.

இதற்குள் மதியம் நெருங்கி விட்டது. ஆதவனும் தன் வெப்பத்தை தணித்துக் கொண்டார்.

புயலாக அடித்த காற்று படிப்படியாக குறைந்து தென்றலாக மாறியது. திருக்காரிக்கரை கிராம மக்களும் தமது இல்லங்களை விட்டு வெளிவரத் தொடங்கினர்.

இந்த மாறுதல்களையெல்லாம் கவனித்த மாருதி, இவையெல்லாம் சாதாரண மாயைகள் அல்ல. ஒரு தெய்வத்தின் லீலைகள் என்பதை புரிந்து கொண்டார்.

அவர் யோசித்த போது, உண்மைகள் யாவும் அவர் ஞான அறிவிற்கும் புலனானது.

இந்த தலம் ஸ்ரீ கால பைரவரின் ஷேத்திரம் ஆயிற்றே. அவர்தான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டார்.

தான் கொண்டு வந்த சுயம்புலிங்கத்தை அவரோடு வைத்துக் கொள்ளவே இத்தனை நாடகங்கள் ஆடி இருக்கின்றார்.

ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் கையால் பிரதிஷ்டையாக வேண்டிய லிங்கம். அதே லக்கனத்தில் கால பைரவர் கையால் திருக்காரிக் கரையில் பிரதிஷ்டையாகி விட்டதே.

அங்கு ஸ்ரீராமர் தன் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பாரே என்று பலவாறு நினைத்து ஆத்திரமும் துக்கமும் அடைந்தார்.

Tags:    

Similar News