ராமகிரி தல வரலாறு-ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம்
- இதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமர் அவனை யுத்தத்திலே வதம் செய்து தனது தேவியை மீட்டுக் கொண்டு வந்தார்.
- பிறகு வானர பரிவாரங்களோடு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்.
திரேதாயுகத்திலே ஸ்ரீமன் நாராயணன் ராமாவதாரம் எடுத்து வந்தபோது, சீதா தேவியை இலங்கை வேந்தன் ராவணாசுரன் கவர்ந்து சென்று, சிறை வைத்தான்.
இதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமர் அவனை யுத்தத்திலே வதம் செய்து தனது தேவியை மீட்டுக் கொண்டு வந்தார்.
பிறகு வானர பரிவாரங்களோடு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்.
பிரம்ம அம்சத்தில் பிறந்தவனும், வேதங்களை நன்கு பயின்றவனும், சிறந்த சிவபக்தனுமாகிய ராவணனை வதம் செய்த காரணத்தால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டு இருந்தது.
அந்த தோஷத்துடன் அயோத்தி சென்று, முடிசூடிக் கொண்டு, அரசாள்வது முறையாகாது என்றும் குல குருவான வசிஷ்டர் முதலான முனிவர்கள் கூறினர்.
எனவே ராமேஸ்வரத்தில் அதற்கு ராமர் பரிகாரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு (இயற்கையாக தோன்றியது) லிங்கத்தைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து பூஜித்து, பிரம்ம கத்தி தோஷத்தில் இருந்து விடுபட ஸ்ரீராமர் முடிவு செய்தார்.
ஆஞ்சனேய சுவாமியை அருகில் அழைத்து, "வாயுபுத்திரா, இன்றே நீ காசித்தலம் செல்வாயாக என்று பணித்தார்.