ஆன்மிகம்

நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Published On 2018-05-07 03:54 GMT   |   Update On 2018-05-07 03:54 GMT
பழமைவாய்ந்த கோவில்களில் ஒன்றான நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழமைவாய்ந்த கோவில்களில் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி கோடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில் பெருமாள், தாயார் வீதி உலா நடந்து வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்து. காலை 7 மணிக்கு பெருமாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 8 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர் 4 ரதவீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. இதில் திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

10-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) காலை பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து தாமிரபரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் வெள்ளி பல்லக்கில் பெருமாள் வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
Tags:    

Similar News