ஆன்மிகம்

விநாயகருக்கு உகந்த சதுர்த்தி வழிபாடு

Published On 2018-01-17 08:06 GMT   |   Update On 2018-01-17 08:06 GMT
விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை போன்ற பாடல்களை பாடி, மூல முதல்கடவுளை வழிபாடு செய்யலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை போன்ற பாடல்களை பாடி, மூல முதல்கடவுளை வழிபாடு செய்யலாம். காரிய சித்திமாலை என்ற பாடல்களில், எடுத்த காரியங்களில் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்பு சொல்லப்பட்டுள்ளது. 

விநாயகப்பெருமானின் முன்பாக அமர்ந்து, அவருக்கு உகந்த ஸ்லோகத்தை மனதை ஒருமுகப்படுத்தி, பாராயணம் செய்து வந்தால், மனதில் விரும்பிய விஷயங்கள் யாவும் மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் விரைவில் நடந்தேறும். காரிய சித்திமாலை பாடல்களை, காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் சொல்லி வந்தால், நினைத்த காரியங்கள் கைகூடும். 

அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் தொடர்ச்சியாக இந்தப் பாடலை மனதில் சொல்லிக்கொண்டு வந்தால், மனம் அமைதி காணும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில், தேய்பிறை சதுர்த்தி அன்று, எட்டு முறை இந்தப் பாடலைப் பாடினால் ‘அஷ்டமா சித்தி’ கைகூடும் என்கிறார்கள். தினமும் 21 முறை இப்பாடலை பாடுவோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேன்மையான நிலையை அடைவார்கள்.
Tags:    

Similar News