ஆன்மிகம்

பஞ்சமி திதியில் ஜோதி வழிபாடு

Published On 2017-12-13 08:37 GMT   |   Update On 2017-12-13 08:37 GMT
ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.
அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. 

‘பஞ்ச்’ என்றால் ஐந்து என்று பொருள். பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும். இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்பொழுது ‘ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும். இப்படிச் செய்தால் அம்பிகையின் அருளாளல் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.
Tags:    

Similar News