ஆன்மிகம்

இறைவன் படியளக்கும் இனிய நாள்

Published On 2017-12-11 09:18 GMT   |   Update On 2017-12-11 09:18 GMT
மார்கழி அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால், அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்.
மார்கழி அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால், அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். இறைவன் சன்னிதியில் அரிசி வைத்துவிட்டு, அதை எடுத்து வந்து வீட்டில் வைப்பது நல்லது. அன்றைய தினம் எறும்புக்கு அரிசி, நொய் குருணை போன்றவற்றைப் போடலாம். யானைக்கு கரும்பு, பழம், பசுவிற்கு கீரை போன்றவற்றைக் கொடுப்பது நல்லது.

மேலும் அன்னதானம் செய்தால் புண்ணியம் வந்து சேரும். பொருளாதார வசதியும் பெருகும். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கிருஷ்ண பகவானே சொல்கிறார். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். படியளக்கும் திருநாளில் வழிபாட்டை மேற்கொண்டால் படிப்படியாக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த இனிய நாள் 9.1.2018 (மார்கழி 25-ந்தேதி) செவ்வாய்க்கிழமை வருகிறது. 
Tags:    

Similar News