ஆன்மிகம்

சன்னிதியை மறைக்காதீர்கள்

Published On 2017-12-06 09:58 GMT   |   Update On 2017-12-06 09:58 GMT
மூலவருக்கும், அவருக்கு எதிர்புறம் உள்ள அவரது வாகனத்திற்கும் இடையில் நின்று வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வது ஏன் என்று பார்க்கலாம்.
மூலவருக்கும், அவருக்கு எதிர்புறம் உள்ள அவரது வாகனத்திற்கும் இடையில் நின்று வழிபாடு செய்யக்கூடாது. அர்ச்சகர்கள் பலரும் வழிவிட்டு நிற்கும்படி கூறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். 

சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோவில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. 

இம்மூச்சுக்காற்று தடை படாமல் செல்வதற்காகவே குறுக்கே போகக் கூடாது, சன்னிதியை விட்டு அகன்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள். 
Tags:    

Similar News