ஆன்மிகம்

மயிலாடுதுறை துலாகட்டத்தில் ஆரத்தி வழிபாடு

Published On 2017-09-18 03:03 GMT   |   Update On 2017-09-18 03:03 GMT
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகாபுஷ்கர விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை ஆரத்தி வழிபாடு நடை பெற்றது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகாபுஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி மயிலாடுதுறை துலாகட்டத்தில் தினமும் காலை மகாயாகமும், மாலை காவிரி நதிக்கு ஆரத்தி வழிபாடும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை ஆரத்தி வழிபாடு நடை பெற்றது.

இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் ராதா கிருஷ்ணன், பவுன்ராஜ், காவிரி புஷ்கர விழா குழு ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் காவிரி நதிக்கு மகாஆரத்தி காண்பித்தனர். அப்போது ஏராளமான பெண்கள் கைகளில் அகல்விளக்கை ஏந்தி ஆரத்தி வழிபாட்டில் ஈடுபட்டனர். முன்னதாக பக்தி பாடல்கள் பஜனையும், லலிதா சகஸ்ரநாமம், விஸ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Tags:    

Similar News