ஆன்மிகம்

மண் பிரசாதமாக வழங்கும் கோவில்

Published On 2017-09-08 05:08 GMT   |   Update On 2017-09-08 05:09 GMT
நாகத்தை வழிபாட்டு தெய்வமாகக் கொண்ட நாகர்கோவில் நாகராஜா கோவில், கும்பகோணம் சங்கரன் கோவில் உள்பட சில தலங்களில் புற்று மண்ணே பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன.
நாகத்தை வழிபாட்டு தெய்வமாகக் கொண்ட நாகர்கோவில் நாகராஜா கோவில், கும்பகோணம் சங்கரன் கோவில் உள்பட சில தலங்களில் புற்று மண்ணே பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன.

இத்தலங்களில் உள்ள புற்று மண் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கின்றன. இப்புற்று மண் பல வியாதிகளைக் குணப்படுத்துவதாக நம்புகின்றனர். சில இடங்களில் புற்றிலிருந்து எடுத்த ஒருவித மையைப் பிரசாதமாகக் தயாரித்து வழங்கும் வழக்கம் உள்ளது. இந்த மை பலவித வியாதிகளைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது. குழந்தை இல்லாதவர்கள் நாகத்தை சிலை வடிவில் அமைத்து ஆறுமாதம் தண்ணீரிலும் ஆறுமாதம் நெய்யிலும் வைத்து பூஜை செய்து அரசமரத்தில் வைத்து வழிபடுவார்கள்.
Tags:    

Similar News