ஆன்மிகம்
32 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம் நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட போது எடுத்தபடம்.

நாகையில் 32அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்

Published On 2017-08-26 06:15 GMT   |   Update On 2017-08-26 06:15 GMT
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகை விஸ்வரூப விநாயகர் குழு சார்பில் ஆண்டுதோறும் 32 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகை விஸ்வரூப விநாயகர் குழு சார்பில் ஆண்டுதோறும் 32 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகை சவுந்தரராஜபெருமாள் கோவில், நீலாயதாட்சி அம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், மலையீஸ்வரன் கோவில், வெளிப்பாளையம் ஏழை பிள்ளையார் கோவில், செல்வ விநாயகர் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதில் நாகை விஸ்வரூப விநாயகர் குழு சார்பில் 31-வது ஆண்டை முன்னிட்டு நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் 32 அடி உயரமுள்ள விஸ்வரூப விநாயகர் சிலை மற்றும் 3 அடி உயரமுள்ள களிமண் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று மாலை 32 அடி உயர விஸ்வரூப விநாயகருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வடம்பிடித்து இழுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் வானவேடிக்கை, மங்கள வாத்தியங்கள், கேரள செண்டை மேளம் முழங்க , கிராமிய வீர விளையாட்டு, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தேரடியிலிருந்து ஊர்வலம் தொடங்கியது.

தேரடியிலிருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் நீலா கீழவீதி, தெற்குவீதி, எல்.ஐ.சி வழியாக வந்து நாகை முக்கிய வீதியின் வழியாக சென்று நாகூர் வெட்டாற்று பாலத்தை சென்றடைந்தது. பின்னர் வெட்டாற்று பாலத்தில் விநாயகர் சிலைகளுக்கு அபிசேகம் செய்து நாகூர் பட்டினச்சேரி பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராமமக்கள் ஒத்துழைப்புடன் படகுகளில் ஏற்றி அங்கிருந்து வெட்டாற்றின் முகத்துவாரத்தில் கடலில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
Tags:    

Similar News