ஆன்மிகம்
ஆவணி தபசு திருவிழா கொடியேற்றத்துக்கு பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்த படம்.

பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா கொடியேற்றம்

Published On 2017-08-21 04:57 GMT   |   Update On 2017-08-21 04:57 GMT
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் பிரசித்தி பெற்ற பால்வண்ணநாதர்- ஒப்பனையம்மாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி தபசு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த திருவிழா தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை 8.20 மணிக்கு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ம் திருநாளான வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தபசு திருவிழா 13-ம் திருநாளான 1-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு சுவாமி முகலிங்கநாதராகவும், இரவு 12 மணிக்கு பால்வண்ணநாதராகவும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News