ஆன்மிகம்

வாஸ்து புருஷனின் ஆதிக்க மண்டலம்

Published On 2017-08-19 06:03 GMT   |   Update On 2017-08-19 06:03 GMT
கட்டமைப்புகள் அமையும் மனைக்கு ஈசானியம் எனப்படும் வடகிழக்கு திசையில் தலையும், நைருதி எனப்படும் தென்மேற்கு திசையில் கால்கள் உள்ள நிலையில் குப்புற படுத்திருப்பதாக உருவகம் செய்யப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தின் அதிதேவதையாக வாஸ்து புருஷன் குறிப்பிடப்படுகிறார். கட்டமைப்புகள் அமையும் மனைக்கு ஈசானியம் எனப்படும் வடகிழக்கு திசையில் தலையும், நைருதி எனப்படும் தென்மேற்கு திசையில் கால்கள் உள்ள நிலையில் குப்புற படுத்திருப்பதாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. அப்படி படுத்திருக்கும் மனையின் மொத்த பரப்பளவு வாஸ்து மண்டலம் என்று குறிப்பிடப்படுகிறது.

அந்த மண்டலத்தில் அஷ்ட திக்கு பாலகர்கள் அனைவரும், தமக்கு உரிய திசைகளில் காவல் காப்பதாக ஐதீகம். அவர்களை தவிர, வாஸ்து மண்டலத்தில் மேலும், நாற்பத்தி ஐந்து தேவர்கள் வசிப்பதாகவும் விவரிக்கப்பட்டிருக்கிறது.

வாஸ்து நாட்கள்

வாஸ்து புருஷன் ஒரு வருடத்தின் நான்கு வெவ்வேறு மாதங்களில் உறக்கத்தில் ஆழ்ந்து விடுவதாகவும், மீதி உள்ள எட்டு மாதங்கள் மட்டும் அவர் விழித்திருப்பார் என்றும் ஐதீகம். அவர் கண் விழித்திருக்கும் நேரத்தை கணக்கிட்டு, அவரது செயல்களுக்கு தக்கவாறு கட்டிட வேலைகளை தொடங்கி செய்யப்படுவது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு ஆண்டுக்கு எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே இருக்கும்.
Tags:    

Similar News