ஆன்மிகம்

சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா

Published On 2017-08-16 03:20 GMT   |   Update On 2017-08-16 03:20 GMT
சுவாமிமலை சுவாமி நாதர் கோவிலில் நேற்று ஆடிகிருத்திகையையொட்டி தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுவாமிமலை சுவாமி நாதர் கோவிலில் நேற்று ஆடிகிருத்திகையையொட்டி தெப்பத்திருவிழா நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் பாலசுப்பிர மணிய சாமி வீதி உலா நடை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும்,அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையருமான கஜேந்திரன் மற்றும் கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்(பொறுப்பு) மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News