ஆன்மிகம்

சவுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம்

Published On 2017-08-06 03:21 GMT   |   Update On 2017-08-06 03:21 GMT
வடமதுரையில் உள்ள சவுந்தரராஜபெருமாள் திருக்கோவிலில் ஆடி திருவிழாவின் 7-வது நாளான நேற்று பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
வடமதுரையில் உள்ள சவுந்தரராஜபெருமாள் திருக்கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று மோர்பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார் மண்டகப்படியில் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் தாயார் சன்னதிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் ஆராதனை, வாசுதேவ புண்யாவஜனம், ஹோமம், சவனத் திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பெருமாளுக்கு சீர் அழைத்து வரப்பட்டு பட்டு வஸ்திரம், திருமாங்கல்யம், பூமாலை சாற்றப்பட்டு, பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க பெருமாளுக்கு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சவுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு 9 மணி அளவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News