ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்திய போது எடுத்த படம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு

Published On 2017-08-05 03:02 GMT   |   Update On 2017-08-05 03:02 GMT
ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனை வழிபட்டால் தங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று காலையில் இருந்து பெண்கள் மஞ்சள் உடை உடுத்தியும், கையில் தீச்சட்டி ஏந்தியும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து அம்மனை வழிபட்டனர்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கரூர், அரியலூர், பெரம்பலூர் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை வழிபட்டு சென்றனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி, துறையூர் போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக போலீசார் கண்காணித்து வந்தனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் மேற்பார்வையில் போலீசார் மற்றும் ஊர்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News