ஆன்மிகம்

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவது ஏன்?

Published On 2017-06-26 07:43 GMT   |   Update On 2017-06-26 07:43 GMT
அனுமனுக்கு வெண்ணெய் சாற்றும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. அனுமனுக்கு வெண்ணெய் சாற்றும் பழக்கம் ஏன் வந்தது என்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.
ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம்.

வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

Tags:    

Similar News