ஆன்மிகம்

ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 26-ந்தேதி நடக்கிறது

Published On 2017-06-24 03:51 GMT   |   Update On 2017-06-24 03:51 GMT
தாராவியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மும்பை தாராவி டிரான்சிட் கேம்ப் பிளாக் எண் 12-ல் புதிதாக ஆனந்த விநாயகர் கோவில் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கோவிலில் பாலமுருகன், ஆஞ்சநேயருக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. முன்னதாக கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று(சனிக்கிழமை) தொடங்குகின்றன. இதையொட்டி கோவிலில் காலை 8 மணி முதல் மங்கள இசை, திருமுறைபாராயணம், விக்னேஷ்வர பூஜை, கணபதி, நவக்கிரக, சுதர்சன, மகாலட்சுமி ஹோமங்கள் நடக்கின்றன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாம் கால யாக பூஜை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கின்றன.

கும்பாபிஷேக தினமான 26-ந்தேதி(திங்கட்கிழமை) அன்று காலை 9 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விமான கோபுரங்கள் மற்றும் ஆனந்த விநாயகர் மூலஸ்தானத்திற்கும் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் வர்ஷா கெய்க்வாட், கேப்டன் தமிழ்ச்செல்வன், தொழில் அதிபர்கள் பாக்கியநாதன், ஆல்பர்ட் நாடார், கங்காதரன், கவுன்சிலர் மாரியம்மாள், தாராவி தாலுகா சிவசேனா துணை தலைவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம், மும்பை காங்கிரஸ் செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ஜெகதீசன் நாடார் மற்றும் உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News