ஆன்மிகம்

காசியில் உள்ள முக்கியமான 8 பைரவ தலங்கள்

Published On 2017-06-14 06:31 GMT   |   Update On 2017-06-14 06:31 GMT
காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை பார்க்கலாம்.
காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. இவைகள் எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம். ஆகவே மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர்.

1. வடக்கே காசி நகரில் அனுமன் காட்டில்-குரு பைரவர்.

2. துர்கா மந்திரில் - சண்ட பைரவர்

3. விருத்தகாளேசுவரத்தில் - அஜிதாங்க பைரவர்

4. லட் பைரவர் கோவிலில் - கபால பைரவர்

5. திரிலோசனகஞ்ச்சில் - சங்கார பைரவர்

6. தேவரா கிராமத்தில் - உன்மத்த பைவரர்

7. காமாச்சாவில் - வடுக பைரவர்

8. காசிபுராவில் - பீஷாண (பூத) பைரவர்

கார்த்திகை, மார்கழி மாதங்களில் அஷ்டமி தினத்தன்று இந்த வழிபாடு செய்யப்படுகின்றது.
Tags:    

Similar News